சம்பள பிரச்சினையை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை (01) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை 6.30 மணி முதல் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், நாளை செவ்வாய்க்கிழமை (02) நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம், ஆனால் இன்று ஜனாதிபதி அலுவலகம் எங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. எனவே, திட்டமிட்ட வேலைநிறுத்தத்தை கண்டி, அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல் மற்றும் பதுளை போன்ற 05 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்தோம். இன்று தீர்வு கிடைக்காவிட்டால் நாளை நாடாளவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM