அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் டொல்ஃபி என்ற இக்கருவி சலவை இயந்திரத்தின் வேலையை செய்வதால் இனி சலவை இயந்திரத்துக்கு வேலை இருக்கப் போவதில்லை.

ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கியிருக்கின்றார்.

சோப் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் இந்தக் கருவி சலவை இயந்திரத்தின் பாவனையைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுவிடும் சாத்தியம் நிலவுகிறது.

ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளைப் போட்டு விட வேண்டும்.

டொல்ஃபியை ஒன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும். அரை மணி நேரத்தில் துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும்.

சலவை இயந்திரத்தை விட துணிகளை மிக மென்மையாகக் கையாளும் டொல்ஃபி, பருத்தி, பட்டு, பாலியெஸ்டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்யும்.