விஷ்மி, காவிஷா துடுப்பாட்டத்தில் அபாரம்; ரி20யில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

Published By: Vishnu

31 Mar, 2024 | 11:21 PM
image

(நெவில் அன்தனி)

பொச்செவ்ஸ்ட்ரூம் சென்வெஸ் பாக் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (30) நடைபெற்ற 2ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை 7 விக்கெட்களால் இலங்கை இலகுவாக வெற்றிகொண்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்திக் கொண்டுள்ளது.

முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

18 வயது பருவ மங்கை விஷ்மி குணரத்ன, 23 வயதான காவிஷா ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 76 ஓட்டங்கள் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கியது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி சமரி அத்தபத்து (6), ஹர்ஷிதா சமரவிக்ரம (12), ஹாசினி பெரேரா (1) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (62 - 3 விக்.)

இதன் காரணமாக இலங்கை மற்றொரு தோல்வியை எதிர்கொள்ளும் என கருதப்பட்டது.

ஆனால், விஷ்மி குணரட்ன 57 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 65 ஓட்டங்களுடனும் காவிஷா டில்ஹாரி 28 பந்துகளில் 6 பவுண்டறிகள் உட்பட 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

தென் ஆபிரிக்கா முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

அனெக் பொஷ் 50 ஓட்டங்களையும் மாரிஸ்ஆன் கெப் 44 ஓட்டங்களையும் பெற்று  துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் அச்சினி குலசூரிய 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோஷி ப்ரியதர்ஷனி, சமரி அத்தப்பத்து, காவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: காவிஷா டில்ஹாரி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01