இந்திய ரியல் எஸ்டேட் ஈகோ சிஸ்டத்திற்காக எலாரா டெக்னாலஜீஸ் வழங்கும் வித்யாசமான சலுகை

Published By: Priyatharshan

20 Mar, 2017 | 05:39 PM
image

ப்ராப்டைகர்.லாம், ஹவுசிங்க்.லாம் மற்றும் மகான்.கொம் ஆகியவற்றின் உரிமையாளர்களான எலரா டெக்னாலஜீஸ் நிறுவனம், சர்வதேச அளவில் காட்சிப்படுத்திக் கொள்ள வசதியாக இந்திய ரியல் எஸ்டேட் ஈகோசிஸ்டத்திற்காக முதல் முறையாக சலுகையை அறிவித்துள்ளது.

ஆர்இஏ குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்மார்ட் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் இண்டர்நேஷனல் புராபர்டி பொருட்காட்சி, பிராந்தியாத்தில் பல்வேறு எடிஷன்களுடன் ஆசியாவின் நீண்ட காலமாக நடைபெறும் சொத்து மற்றும் முதலீட்டு பொருட்காட்சி ஆகும்.

இந்தியாவின் முன்னணி ஒன்லைன் தொடங்கி ஆஃப்லைன் வரையிலான (ஓ2ஓ) டிஜிடல் ரியல் எஸ்டேட் சேவைத் தளமாகத் திகழ வேண்டும் என்னும் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட எலாரா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்த இந்த கூட்டு முனைவு, இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களைப் பன்னாட்டு மக்களுக்கும், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் காட்சிப்படுத்துவதுடன் மிகச் சிறந்த மற்றும் கவர்ச்சியான தீர்வுகளை வழங்கவும் உதவும்.

மலேஷியா, தாய்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 கட்டுமான நிறுவனங்களும், 15 சேவை நிறுவனங்களும் இந்தப் பொருட்காட்சியில் பங்கேற்கின்றன. 500 – 600 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 4000க்கும் அதிகமானோர் பொருட்காட்சியைக் கண்டு களித்தனர்.

சலுகையின் ஒரு பகுதியாக நிறுவனங்களுக்கு அவுட் ஆஃப் பாக்ஸ் இண்டராக்ஷன்ஸ் (இது எலாரா டெக்னாலஜீஸின் ஓர் அங்கமாகும்) வழங்கும் தீர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். வீடு வாங்க விரும்புவோர் தங்கள் கனவு இல்லங்களை நனவாக்கிக் கொள்ள அதி நவீனத் தீர்வுகளை அளிப்பதுடன், கட்டுமான நிறுவனங்களுக்குப் பல்வேறு தொழில்நுட்பங்களை இயலச் செய்யும் சந்தைத் தீர்வுகளை வழங்கிச் சொத்துக்களைக் காட்சிப்படுத்தவும் உதவும்.

இது குறித்து ஹவுசிங்க்.கொம், பிளாட்ஃபார்ம் பிசினஸ் யூனிட் முதன்மை வணிக அதிகாரி மணி இரங்கராஜன் கூறுகையில் ‘ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் இண்டர்நேஷனல் புராபர்டி பொருட்காட்சியுடனான எங்களது உறவு என்பது ஆர்இஏ குழுமத்துடனான எங்களது இணைந்த செயல்பாட்டுக்கான ஆதாரம் என்பதுடன் ஈடு இணையின்றிச் சர்வதேச அளவில் காட்சிப்படுத்திக் கொள்ள இந்திய ரியல் எஸ்டேட் ஈகோ சிஸ்டத்திற்குக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகும்.

ஒன்லைன் தொடங்கி ஆஃப்லைன் வரை (ஓ2ஓ) முன்னணி நிறுவனமாகத் திகழ வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். மேலும் இந்த இணைந்த செயல்பாடு மூலம் இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் பன்னாட்டுச் சந்தையைக் கைப்பற்ற உதவ முடியும். இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஈகோ அமைப்பை உருவாக்க எங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்பதும் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஓஒபிஐ தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு மூலம் இதைச் செய்து வருகிறோம். இதன் மதிப்பை இந்திய மற்றும் பன்னாட்டுக் கட்டுமான நிறுவனங்கள் உணர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.

எமரல்ட் ஹெவன் ரியாலிடி (டிவிஎஸ் குழுமம்) சிஇஓ மற்றும் தலைவர் ஆர் சந்திரமௌலி பேசுகையில்,

‘ஸ்மார்ட் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் இண்டர்நேஷனல் புராபர்டி பொருட்காட்சி என்பது உலகம் முழுவதுமுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான மிக முக்கிய நிகழ்ச்சி ஆகும்.

இதில் இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களைக் காட்சிப்படுத்த எலாரா டெக்னாலஜீஸ் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்ய எங்ளுக்குக் கிடைத்த மகத்தான வாய்ப்பு என்பதுடன் புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் ரியல் எஸ்டேட் சந்தையை இன்னும் அதிக உயரங்களுக்கு எடுத்தச் செல்லவும் இயலும். மேலும் சிங்கப்பூரில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பது எங்களுக்கு ஆதாயமான விஷயம். நடப்பு ஆண்டு நடைபெற உள்ள இந்தப் பொருட்காட்சி எங்கள் நீண்ட கால உறவிற்கான தொடக்கமாக இருக்குமென நம்புகிறோம்’ என்றர்.

இணைந்த செயல்பாடு குறித்து கோஹோம்.கொம் .பிகே. ஸ்மார்ட் எக்ஸ்போஸ்.காம் மற்றும் ஸ்க்வேர்ஃபுட்.காம்.பிகே. வணிக வளர்ச்சி மேலாளர் தீப் வாஸ்வானி கூறுகையில்,

‘இந்தியாவின் மிகப் பெரிய டிஜிடல் ரியல் எஸ்டேட் வலைப்பணிகளுள் ஒன்றை எலாரா டெக்னாலஜீஸ் நடத்தி வருகிறது. அதனுடன் இணைந்து செயல்பட்டுத் தென் கிழக்கு ஆசியாவில் வாழும் இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்யும் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன ஈகோ சிஸ்டத்தைப் பயனப்டுத்திக் கொள்ள எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ஆகும்.

பிராந்தியத்தில் இந்தியா அதிக கவர்ச்சியுள்ள ரியல் எஸ்டேட் சந்தைகளுள் ஒன்று என்பதால் இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் பொருட்காட்சியில் பங்கேற்பதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறுவதுடன்இ பயனும் பெறுவார்கள்’ என்றார்.

நடப்பு ஆண்டு ஜனவரியில் ப்ராப்டைகர்.காம் மற்றும் ஹவுசிங்க்.காம் ஆகியவை இந்தியாவின் மிகப் பெரிய டிஜிடல் ரியல் எஸ்டேட்டாகக் கூட்டாக இணைந்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டன. ஆன்லைன் தொடங்கி ஆன்லைன் வரையிலான (ஓ2ஓ) ரியல் எஸ்டேட் தளமாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

தனிப்பட்ட தேடல்இ மென்நிகர் காட்சி, இடங்களைப் பார்த்தல், சட்ட மற்றும் நிதி விவகாரங்களில் கவனம், பேச்சுவார்த்தை, சொத்து பதிவு, வீட்டுக்கான கடன்கள், விற்பனைக்குப் பிந்திய சேவை உள்ளிட்ட பல்வேறு ரியல் எஸ்டேட் பணிகளைச் செய்யும் ஒரே நிறுவனம் இதுதான்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கிளைகளிக் கொண்ட முன்னணி டிஜிடல் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்இஏ குழமம், நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கி உள்ளது.

ஸ்மார்ட் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் இண்டர்நேஷனல் புராபர்டி பொருட்காட்சி சிங்கப்பூரில் உள்ள சண்டெக் சிங்கப்பூர் கன்வெஷன் மற்றும் பொருட்காட்சி மையத்தில் 2017 மார்ச் 25 மற்றும் 26 திகதிகள் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31