சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வெற்றிகொண்டது குஜராத் டைட்டன்ஸ்

Published By: Vishnu

31 Mar, 2024 | 09:08 PM
image

(நெவில் அன்தனி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று (31) நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயத்தின் 12ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் ஒருவரும் 30 ஓட்டங்களை எட்டவில்லை.

அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத் ஆகிய இருவரும் தலா 29 ஓட்டங்களையும் ஹென்ரிச் க்ளாசன் 24 ஓட்டங்களையும் ஷாபாஸ் அஹ்மத் 22 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் 19 ஓட்டங்களையும் ஏய்டன் மாக்ராம் 17 ஓட்டங்களையும் மயான்க் அகர்வால் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் சார்பாக துடுப்பெடுத்தாடிய ஐவரும் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

ரிதிமான் சஹா 25 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஷப்மான் கில் 36 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் 45 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.

டேவிட் மில்லர் 44 ஓட்டங்களுடனும் விஜய் ஷன்கர் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய கலப்பு இன 4 x...

2024-05-20 20:10:35
news-image

உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-20 19:04:00
news-image

லங்கா புட்போல் கப் இறுதிப் போட்டி...

2024-05-20 12:54:40
news-image

யோர்க்ஷயர் அணியில் இலங்கை வீரர் விஷ்வா...

2024-05-20 12:38:26
news-image

கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி மழையால்...

2024-05-20 02:14:27
news-image

கடைசிப் போட்டியில் பஞ்சாபை 4 விக்கெட்களால்...

2024-05-19 20:30:36
news-image

ஜப்பானில் காலிங்க குமாரகே இரண்டாம் இடம்

2024-05-19 15:38:50
news-image

சென்னையை வெளியேற்றி ப்ளே  ஓவ் சுற்றில்...

2024-05-19 05:16:07
news-image

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2024-05-18 15:36:37
news-image

ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் நிர்வாகிகளுக்கான...

2024-05-18 15:29:57
news-image

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027...

2024-05-18 13:45:50
news-image

சாதனை படைத்த இந்திய அணித் தலைவர்...

2024-05-18 13:42:40