இலங்கையின் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்கள் குவித்து அசத்தல்; கடைசி 4 விக்கெட்களில் கமிந்து 120 ஓட்டங்கள் பகிர்வு

Published By: Vishnu

31 Mar, 2024 | 08:34 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்களைப் பெற்றதன் பலனாக இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 531 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையில் இருக்கிறது.

இந்த எண்ணிக்கையானது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் சதம் குவிக்கப்படமலே பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக 1976இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து பெற்ற 524 ஓட்டங்களே சதம் குவிக்கப்படாமல் பெறப்பட்ட அதிகூடிய முந்தைய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

நேற்று சனிக்கிழமை (30) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கமிந்து மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கடைசி நால்வருடன் 120 விக்கெட்களைப் பகிர்ந்து துரதிர்ஷ்டவசமாக 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர் தனது முதல் 4 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முறையே 61 (எதிர் அவுஸ்திரேலியா 2022), 102 மற்றும் 164 (எதிர் பங்களாதேஷ் - 1ஆவது டெஸ்ட் 2024), 92 ஆ.இ. (எதிர் பங்களாதேஷ் - 2ஆவது டெஸ்ட் 2024) என்ற எண்ணிக்கைகளுடன் மொத்தமாக 419 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் ஜாவேட் மியண்டாடின் முதல் 4 இன்னிங்ஸ்களுக்கான மொத்த எண்ணிக்கைக்குரிய சாதனையை  கமிந்து    மெண்டிஸ் சமப்படுத்தியுள்ளார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை, மேலும் மூவரின் அரைச் சதங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 531 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ், இந்தப் போட்டியிலும் சதம் குவித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி வீரர் அசித்த பெர்னாண்டோ ரன் அவுட் ஆனதால் அவரது சதம் குவிக்கும் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியானது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தபோது தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முதல் டெஸ்ட் நாயகர்களான தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிதனாத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், முதல் டெஸ்டில் போன்று அவர்களால் சாதிக்க முடியாமல் போனது.

தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 411 ஓட்டங்களாக இருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் கமிந்து மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் மறுபக்கத்தில் இருந்தார்.

அதன் பின்னர் பொறுப்புணர்வுடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் கடைசி 4 விக்கெட்களில் 120 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

ப்ரபாத் ஜயசூரியவுடன் 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோருடன் கடைசி 3 விக்கெட்களில் மேலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 167 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷக்கிப் அல் ஹசன் 3 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இலங்கை அணி 476 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 55 - 1 விக். (ஸக்கிர் கான் 29 ஆ.இ., மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, லஹிரு குமார 4 - 1 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01