ஏபரல் 5இல் சஜித் தலைமையில் புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் : மனோ, ஹக்கீம், ரிஷாத் உள்ளிட்டோருடன் உடன்பாடு கைச்சாத்து

31 Mar, 2024 | 05:47 PM
image

ஆர்.ராம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளது. இந்தக் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அணியினரும், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் இந்தக் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ளது. அத்துடன், தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் குழு ஒவ்வொன்றும் எமது கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது. அது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதனை விடவும் சிவில் அமைப்புகளும்  தொழிற்சங்கங்களும் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகும் நாளில் கைகோர்க்கவுள்ளன. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்திலும், அதன் பின்னர் கூட்டணி அறிமுக நிகழ்வானது எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திலும் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், அரசியல் இலாபங்களுக்காக செயற்படுபவர்களையும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களையும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை. எமது கொள்கைகளுடன் இணக்கம் வெளியிட்டு கட்சியில் இணைய விரும்புபவர்களையே இணைத்துக்கொள்ளவுள்ளோம்.

இதேநேரம், எதிர்வரும் மே தினத்தில் நகர சபை மண்டபத்தில் பாரிய கூட்டமொன்றுக்கான ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இலங்கை வரலாற்றில் அதிகளவு மக்கள் பங்கேற்ற கூட்டமாக பதிவாகும். இந்த மே தினத்தன்றும் எமது கூட்டில் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20