இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் விதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிராஞ் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரிடத்தில் இமயமலைப் பிரகடனம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலங்கைக்கான மன்றத்தின் பிரதிநிதியான பியரதன தேரர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் அவுஸ்திரேலிய பிரதிநிதி பிரகாஷ் இராஜசுந்தரம் ஆகியோர் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிராஞ்ஞை சந்தித்து இமயமலைப் பிரகடனத்தை கையளித்தனர்.
இந்நிலையில் வதிவிடப்பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிராஞ் தெரிவிக்கையில், சிறந்த இலங்கைக்கான மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர். ‘இமயமலை பிரகடனம்’ மற்றும் ‘தேசிய உரையாடலுக்கான’ திட்டங்கள் ஆகியவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை பற்றிய அவர்களின் சமூக மற்றும் மத உரையாடல்களின் மூலமாக புதுப்பிப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்றார்.
இதேவேளை, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடத்தில், மாதம்பகம அசாஜி திஸ்ஸ தேரர், கித்தலாகம ஹேமசார நாயக்க தேரர் மற்றும் பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர் ஆகியோர் இமயமலைப் பிரகடனத்தை கையளித்தனர்.
இதன்போது, நல்லை ஆதீன முதல்வருடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டிய விடயங்களையும் தேரர்கள் அமைச்சரிடத்தில் வெளிப்படுத்தினார்கள்.
அதன்படி, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம், குருந்துர் மலை, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள லிங்கேஸ்வரர் கோவில், கிருஸ்ணர் கோவில், சடையம்மா சாதுவின் சமாதி ஆகியன தொடாபில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வொன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் அமைச்சர் விதுர, குறித்த ஆலயங்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு அளிக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியதோடு, வடமாகாண ஆளுநரின் உதவியுடன் பெருமளவான விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM