முன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ReeBonn கொஸ்மெடிக்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், புதுவருடத்தை முன்னிட்டு பாவனையாளர் விற்பனை ஊக்குவிப்புத்திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட ReeBonn ஷம்பு தயாரிப்புக்கும் கண்டிஷனர் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சகல விற்பனை நிலையங்களிலும் இந்த சலுகை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வழங்கப்படுகிறது.
ReeBonn ஷம்பு தயாரிப்புகளான Aloe Vera, Amla, Virgin Coconut Oil மற்றும் Tea Tree போன்றவற்றின் கொள்வனவுகளின் போது இலவசமாக குறிப்பிட்ட கண்டிஷனர் வழங்கப்படும். மேற்படி தெரிவுகளில் 100 மி.லீ. அல்லது 200 மி.லீ. ஷம்பு கொள்வனவு செய்யும் போது இந்த சலுகை செல்லுபடியாகும்.
Reebonn கண்டிஷனர்கள் மேம்படுத்தப்பட்ட ஈரப்பதத்தினையும் விற்றமின் சேர்மானத்தையும் கொண்டுள்ளது. Reebonn கூந்தல் கண்டிஷனர்களை பயன்படுத்தும் பெண்கள் தமது கூந்தல் அதிகளவு பளபளப்பாகவும் கவர்ச்சியானதாகவும் தோற்றமளிப்பதை உணர்வார்கள் இதன் காரணமாக நாட்டிலுள்ள பிரபல அழகியல் சலோன்கள் Reebonn தயாரிப்புகளில் தமது நம்பிக்கையை வைத்துள்ளன.
“ReeBonn தயாரிப்புகள் பல மூலிகை சேர்மானங்களை கொண்டுள்ளன. இவை பளபளப்புரூபவ் போஷாக்கு ஈரப்பதன் மற்றும் வலிமை ஆகியவற்றை கூந்தலுக்கு வழங்கக்கூடியன. அதனூடாக சிகையின் ஆரோக்கியத்தை பேண முடியும். ஆனாலும், நாட்டிலுள்ள பெருமளவான பெண்கள் ஷம்பு பயன்படுத்திய போதிலும், கண்டிஷனர்கள் மீது அதிகளவு அக்கறை காண்பிப்பதில்லை. இதன் பெறுபேறாக அவர்களின் கூந்தல் அவசியமான பளபளப்பு, மென்மை, ஈரப்பதன் மற்றும் போஷாக்கை பெறுவதில்லை. இந்த விசேட ஊக்குவிப்புத்திட்டத்தை நாம் ஏற்பாடு செய்வதன் நோக்கம், ஷம்பு உடன் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும்.” என்றார்.
2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது.
இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், shampoo, silicon conditioner, rinse off conditioner, black henna, face wash, fairness cream, Herbal creamy Beuty soap, Hair oil மற்றும் hand wash liquids போன்றன அடங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM