உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்றையதினம் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகளில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 273 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .
இந்நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களில் இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறுவருவதன் காரணமாக அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸார் 320 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பொலிஸாரின் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM