பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோவுக்கு முலாவது வெற்றி

31 Mar, 2024 | 07:38 AM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ், எக்கானா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (30) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த  லக்னோவ்  சுப்பர் ஜயன்ட்ஸ் 21 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸை வெற்றிகொண்டது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் தனது 2 போட்டிகளில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

குவின்டன் டி கொக், அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், க்ருணல் பாண்டியா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் மயான்க் யாதவ், மொஹ்சின் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும்  லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றி அடையச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக் 54 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் நிக்கலஸ் பூரண் 42 ஓட்டங்களையும் க்ருணல் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

வழமையான அணித் தலைவர் கே.எல். ராகுல் இந்தப் போட்டியில் துடுப்பாட்ட இம்ப்பெக்கட் வீரராக விளையாடினார்.

பந்துவீச்சில் சாம் கரண் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணித் தலைவர் ஷிக்கர் தவான், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் 70 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெற்று விடும் என கருதப்பட்டது.

ஆனால், ஜொனி பெயாஸ்டோவ் ஆட்டம் இழந்ததும் சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் சரிந்தன.

ஜொனி பெயாஸ்டோவ் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங் (19), லியாம் லிவிங்ஸ்டோன் (28 ஆ.இ.) ஆகிய இருவரும் தவானுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய போதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

தவான் 70 ஓட்டங்களுடன் 4ஆவதாக ஆட்டம் இழந்ததும் பஞ்சாபின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயிற்று.

பந்துவீச்சில் மயான்க் யாதவ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹ்சின் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் -...

2025-06-13 00:04:14
news-image

புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட்...

2025-06-12 12:15:14
news-image

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பூரன்,...

2025-06-12 01:37:08
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-06-12 08:35:05
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் சந்த்ரா...

2025-06-11 18:30:20
news-image

ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன்,...

2025-06-11 17:50:17
news-image

மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட்...

2025-06-11 16:58:44
news-image

அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா மோதும்...

2025-06-11 15:01:15
news-image

தரவரிசையில் 166ஆம் இடத்திலுள்ள தாய்ப்பேயை அதிரவைத்து...

2025-06-10 20:04:22
news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10...

2025-06-10 18:04:39
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா: உயரிய...

2025-06-10 14:34:54
news-image

இலங்கை - சைனீஸ் தாய்ப்பே மோதும்...

2025-06-09 16:32:05