பங்களாதேஷ் 3 பிடிகளைத் தவறவிட பலமான நிலையில் இலங்கை; முன்வரிசை வீரர்கள் மூவர் துடுப்பாட்டத்தில் அபாரம்

31 Mar, 2024 | 09:47 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (30) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 3 பிடிகளைத் தவறவிட இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

முன்வரிசை வீரர்களான நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகிய மூவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணிக்கு பலம் சேர்த்தனர்.

போட்டியின் 6ஆவது ஓவரில் இலங்கை 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நிஷான் மதுஷ்கவின் பிடியை ஸ்லிப் நிலையில் மஹ்முதுல் ஹசன் ஜோய் தவறவிட்டார்.

திமுத் கருணாரட்ன 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது பிடியை ஷக்கிப் அல் ஹசன் கோட்டைவிட்டார்.

பின்னர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிடியை ஷஹாடத் ஹொசெய்ன் நழுவவிட்டார்.

பங்களாதேஷ் வீரர்கள் களத்தடுப்பு மற்றும் பிடிகள் எடுப்பது தொடர்பாக கடுமையாக பயிற்சி பெற்று வருகின்றபோதிலும் 3 பிடிகள் தவறவிடப்பட்டமை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக பந்துவீச்சுப் பயிற்றுநர் அண்ட்றே அடம்ஸ் சுட்டிக்காட்டினார்.

நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் முதல் விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

நிஷான் மதுஷ்க 6 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்னவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் 114 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 129 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 86 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 150 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (263 - 3 விக்.)

ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

முதலாவது டெஸ்டில் உபாதைக்குள்ளாகி நாடு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் கசன் ராஜித்தவுக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஷக்கிப் அல் ஹசன் மீண்டும் இணைந்துகொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41