19 வயதின்கீழ் மகளிர் ரி-20 மும்முனை கிரிக்கெட் தொடர்: இலங்கைக்கு 2ஆவது நேரடி வெற்றி

31 Mar, 2024 | 07:07 AM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் இலங்கை இரண்டாவது வெற்றியை ஈட்டியது.

வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியாவை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியில் நெத்மி பூமா, அணித் தலைவி மனுதி நாணயக்கார ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 75 ஓட்டங்களும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தை சற்று வேகமாக ஆரம்பித்த இலங்கை 4.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றது.

தெவ்மி விஜேரத்ன 11 ஓட்டங்களுடனும் சஞ்சனா காவிந்தி 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெத்மி பூமா 7 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களையும் அணித் தலைவி மனுதி நாணயக்கார 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை.

ஹிருணி ஹர்ஷிக்கா 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஆவா லீ 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தின் முன்வரிசை வீராங்கனைகள் டாவினா பெரின் (23), எரின் தோமஸ் (21), செரிஸ் பாவ்லி (20), அபி நோக்ரோவ் (31) ஆகியோரும் மத்திய வரிசையில் சொஃபி ஸ்மெலும் (10 ஆ.இ) இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஷஷினி கிம்ஹானி 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மனுதி நாணயக்கார, ஹிருணி ஹர்ஷிகா, சமோதி மனசிங்க, தெவ்மி விஜேரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியில் அறிமுகமான பிரித்தானிய தமிழ் யுவதி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசிக்கத் தவறியமை அவருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியுடன் இந்தத் தொடரின் இரண்டாவது சுற்று இதே அரங்கில் திங்கட்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய கலப்பு இன 4 x...

2024-05-20 20:10:35
news-image

உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-20 19:04:00
news-image

லங்கா புட்போல் கப் இறுதிப் போட்டி...

2024-05-20 12:54:40
news-image

யோர்க்ஷயர் அணியில் இலங்கை வீரர் விஷ்வா...

2024-05-20 12:38:26
news-image

கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி மழையால்...

2024-05-20 02:14:27
news-image

கடைசிப் போட்டியில் பஞ்சாபை 4 விக்கெட்களால்...

2024-05-19 20:30:36
news-image

ஜப்பானில் காலிங்க குமாரகே இரண்டாம் இடம்

2024-05-19 15:38:50
news-image

சென்னையை வெளியேற்றி ப்ளே  ஓவ் சுற்றில்...

2024-05-19 05:16:07
news-image

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2024-05-18 15:36:37
news-image

ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் நிர்வாகிகளுக்கான...

2024-05-18 15:29:57
news-image

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027...

2024-05-18 13:45:50
news-image

சாதனை படைத்த இந்திய அணித் தலைவர்...

2024-05-18 13:42:40