'இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி அசிங்கமான வேலை செய்யாதே. எப்போது பாடல்கள் எல்லாம் பொதுமக்கள் இடத்தில் வந்ததோ அது அப்பவே பொதுச் சொத்தாக மாறிவிட்டது. உன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என்றால் பாடல்களை எல்லாம் ஒரு அலுமாறியில் மூடி அடைத்து விடு. எப்போது தான் திருந்துவாயோ என்று தெரியவில்லை, மெல்லிசை பாடகர்களை பாட வேண்டாம் என்று சொல்ல நீ யார் என இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இளைராஜாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி பெறாமல் பாடகர் எஸ்.பி.பி பாடியதால் அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இளையராஜாவின் சட்ட எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென எஸ்.பி.பி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இது குறித்கு கருத்து தெரிவித்துள்ள இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், 

''நாம் படைத்தது எல்லாம் மக்களுக்காக படைத்து விட்டாச்சு. மக்கள் பாட்டால் மயங்கி கிடக்கின்றார்கள். நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் நோட்டிஸ் அனுப்பி ஏன்ட பாட்ட போடாதிங்க, குழந்தைகளை தூங்க விடாதிங்க என ரோயல்டி கேப்பது அசிங்கமானது.

இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது. காப்புரிமை கேட்பது அவர் பணம் சம்பாதிக்கவே ஆகும். மக்களை சுதந்திரமாக பாடல் கேட்கட்டுமே. எதற்காக இப்படி செய்கின்றீர்கள். லயிட் மியூசிக் செய்வர்கள் கச்சேரி கிடைக்காமல் தவிக்கின்றார்கள். இந்த பாடல்கள் மூலமே அவர்கள் உழைக்கின்றார்கள். அந்த பணம் உங்களுக்கு வேண்டுமா? அவ்வளவு பஞ்சத்துலையா இருக்கின்றோம். இந்த பணத்தை வாங்கியா பிழைக்க வேண்டும்.

பாடல்களை பாடியவர்கள் அவரின் பாட்டை பாட முன் அனுமதி எதற்காக பெறவேண்டும். இளையராஜா பாடிய தியாகராஜ கீர்த்தனைக்கோ, எம்.எஸ். விஸ்வநாதம் பாட்டுக்கோ முன்னுரிமை வாங்கியா பாடினார்?. தியாகராஜா கீர்த்தனை பாடும் போது தியாகராஜாவுக்கு கப்பம் கட்டினாரா?

மெல்லிசை பாடகர்கள் எல்லாம் பாடல்களை பாடியே சம்பாதிக்கின்றார்கள். அவர்களை பாட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்?. உன்னுடைய பாடல்களை ஏற்கனவே பணத்துக்கு விற்பனை செய்து விட்டாய். அதற்கான சம்பளத்தையும் பெற்று விட்டாய்.

பாடல்கள் எல்லாம் மக்கள் சொத்தாகிவிட்டது. உனக்கு பணம் தேவை என்றால் நான் தருகிறேன். அசிங்கமான வேலை செய்யாதே. கேவலமாக இருக்கின்றது.

இசை வரலாற்றில் இவ்வாறு நடந்ததில்லை. கார்ல போகும் போது பாட்டு கேட்கலாம். ஆனால் முனுமுனுக்க கூடாது. அவ்வாறு முனுமுனுத்தால் பணம் வேண்டும் என்பது கேவலமான ஒன்றாகும்.

இன்று வெளிப்படையாக கூறுகின்றேன். எம்.எஸ். விஸ்வநாதனின் நிறைய பாடல்களை கொப்பியடித்துள்ளோம். அவருக்கு எதனை கொடுத்தோம். தியாகராஜ கீர்த்தனை, பழைய பாடல்கள், ஸ்ரீ ஜெயராம் பாடல்களை மாற்றி மாற்றி பாடியுள்ளோம். இவர்களுக்கும் பணம் கொடுத்தோமா?.

அகங்காரம் வரக் கூடாது. இசையில் தெய்வமாக பார்க்கும் இவரை, எனது பாட்டை பாட வேண்டாம் வாயை மூடு என கூறுவது அப சகுணமாகும். பணத்துக்காகதான் இதனை செய்கின்றார். இதுவரை சம்பாதித்த பணம் போதாததா? நீ சாப்பிடுறதும் கொஞ்சம் தான். எதற்காக புதிய சட்டங்களை இயற்றுகின்றாய். ஏனையவர்களை முட்டாளாக்காதீர்கள். 

மழை, வெயில் போன்று பாடல்களும் இயற்கையாக கிடைக்க வேண்டும். இசை சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்லை. இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எப்ப திருந்த போகின்றார் என்று தெரியவில்லை.''