காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த நோயாளிக்கு செலத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்து நோயாளி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் என்பதுடன் இவர் அண்மையில் காதில் ஏற்பட்ட நோய்க்காக ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .
காதில் ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சைக்காக 11 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும் 12 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பாட்ட உபதையினால் குறித்த நோயாளி அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உயிரிழந்த நோயாளிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி குறித்த விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, குறித்த தடுப்பூசி ஹொரணையில் அமைந்துள்ள மருத்துவ நிறுவனமொன்றில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM