பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழக்கவில்லையென கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க சிறப்பு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், அவரது மூளையின் பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லசந்தவின் கொலை தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் கொலைசெய்யப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதியிவ் கொழும்பிற்கு பொறுப்பாக செயற்பட்ட இராணுவ மேஜரிடமும் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.