கறுப்புப் பணங்களை இலங்கைக்குள் கொண்டு வந்து அதை வெள்ளைப்பணமாக மாற்றும் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த இரு பாகிஸ்தான் பிரஜைகளை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் இவர்கள் இருவரும் வந்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 67 வயதுடையவர்கள் என விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கறுப்பு பணங்களை ஒருவர் தனது காசுப் பையிலும் மற்றையவர் தனது அக்குளுக்குள்ளும் மறைத்து வைத்துக் கொண்டு வரும் போதே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 18 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை, இவர்கள் கறுப்புப் பணங்களை நீண்ட நாட்களாக இலங்கைக்கு கொண்டு வந்து வெள்ளைப் பணமாக மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.