ஹாட் ஸ்பாட் - விமர்சனம்

Published By: Vishnu

30 Mar, 2024 | 01:30 AM
image

'திட்டம் இரண்டு', 'அடியே' என இரண்டு படைப்புகளை வழங்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹாட் ஸ்பாட் 'எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பெரும் சர்ச்சையும், அதிர்வையும் ஏற்படுத்தியது. இதனால் கலாச்சார காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த திரைப்படம்.. அவர்களின் ஆதரவை பெற்றதா? அல்லது அவர்களின் கண்டனங்களுக்கு ஆளானதா ? என்பதனை தொடர்ந்து காண்போம்.

ஒரு இளைஞன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள... திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் அவருடைய தந்தையை சந்திக்கிறார். அவரை சந்தித்து திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைக் கேட்கிறார். வித்தியாசமான பாணியில் கதையை சொன்னால் தயாரிக்கிறேன் என அவரும் சொல்கிறார்.

அந்த இளைஞன் நான்கு கதைகளை சொல்லி.. இதில் எதையாவது ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்கிறார். நான்கு கதைகளும் தயாரிப்பாளருக்கு பிடித்து விட, அவருக்கு திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறார். அதன் பிறகு நான் உங்களது மகளை காதலிக்கிறேன் திருமணம் செய்து தருவீர்களா? என கேட்கிறார். இதற்கு திரைப்படத் தயாரிப்பாளரான தந்தை என்ன பதிலளிக்கிறார்? என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.. இயக்குநராக நடித்திருக்கிறார். தயாரிப்பாளராக இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் பாலமணி மார்பன் தயாரிப்பாளராக நடித்திருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தயாரிப்பாளரிடம் 'Happy married life', 'Golden rules', 'Thakkali chatni', 'Fame game ' எனும் நான்கு துணை தலைப்புகளில் நான்கு கதையை சொல்கிறார். அந்தக் கதை பார்வையாளர்களுக்கு காட்சி மொழியாக விரிவடைகிறது.

இதில் 'ஹேப்பி மேரிட் லைஃப்' எனும் முதல் கதையில் ஆண்கள் தாலி அணிந்து கொள்வது..‌ மாமியார்- மருமகள் சண்டை என்பது போல், மாமனார் -மருமகன் சண்டையை அமைத்திருப்பது.. புதிது என இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்னரே நாடக மேடையில் 'அடடே மனோகர்', 'கிரேசி மோகன்' போன்ற பல ஜாம்பவான்கள் இதனை மேடையேற்றி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் இயக்குநர் புதிது என்று சொல்ல முயன்ற விடயம் புஸ்ஸாகிறது.

ஆனால் பாராட்டப்பட வேண்டிய அம்சமும் ஒன்று இருக்கிறது. மாற்றங்கள் எப்போதும் எம்மிடமிருந்து தான் வர வேண்டும் என்ற ஒரு சிந்தனையை.. இக்கதையின் நாயகனுக்கு பொருத்தி இருப்பதை வரவேற்கலாம். திருமணமான பிறகு பெண்களுக்கு பிறந்த வீட்டின் சுதந்திரம் கலந்த உணர்வு குறைந்து விட்டது என்பதற்காக இயக்குநர் முன்வைக்கும் யோசனை... அவர் சொல்ல வந்த கருத்திற்கு முரணாக இருப்பதால் அபத்தமாக இருக்கிறது.

'கோல்டன் ரூல்ஸ்' எனும் இரண்டாம் கதையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு குடும்ப உறவுகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களால்.. உறவு நிலைகளில் எம்மாதிரியான விபரீத சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை விவரித்திருக்கிறார். இதனை மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் போன்றவர்கள் தங்களது படைப்புகளில் இடம்பெறச் செய்திருப்பதால்.. இதுவும் புதிதாக தோன்றவில்லை. நடிகர் சாண்டி மாஸ்டரும், நடிகை அம்மு அபிராமியும் தங்களது அனுபவிக்க நடிப்பால் புதிய  தலைமுறை ரசிகர்களான 2கே கிட்ஸ்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறார்கள்.

'தக்காளி சட்னி' எனும் கதையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இளைஞர் ஒருவர் எதிர்கொள்ளும் விவரிக்க இயலாத உளவியல் சிக்கலை காட்சிப்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க இரட்டை அர்த்த காட்சிகள் நிரம்பி இருப்பதால், இயக்குநரின் வக்கிர சிந்தனை அப்பட்டமாக வெளிப்படுகிறது. காதலும், காமமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம் தான் என்பதனை சொல்லி இருப்பதால்.. காமத்தின் மீதான பேரன்பு கொண்டிருக்கும் ரசிகர்கள் இந்த அத்தியாயத்தை சிரித்துக் கொண்டே ரசிப்பார்கள்.

இறுதியாக இடம் பிடித்திருக்கும் 'ஃபேம் கேம்' எனும் கதை.. உண்மையில் பார்வையாளர்களுக்கு அதிலும் குறிப்பாக பால்ய வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, ஓங்கி அடித்தது போலான ஒரு அறிவுரையை இயக்குநர் காட்சி படுத்தியிருக்கிறார். இதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

அத்துடன் இந்த கதையை பாதிக்கப்பட்ட தந்தை கதாபாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்த்தி இருக்கும் அணுகுமுறையும் கவனம் பெறுகிறது. சின்னத்திரை மோகத்தில் பெண்மணிகள் தங்களது பிள்ளைகளுக்கு தாங்களே எமனாக எப்படி திகழ்கிறார்கள் என்பதை அந்த கதாபாத்திரம் விவரிக்கும் போது, எம்முள் ஆச்சரியம் ஏற்படுவதுடன் படத்தைப் பார்க்கும் பெண்மணிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

நடிகர்களை பொருத்தவரை கலையரசன் முதன்மையான கவனத்தை கவர்கிறார். இவரையடுத்து ஆண் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் சுபாஷ்.. அவரின் தவிப்பான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. வேறு இரண்டு கதைகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். திறமை மிக்க நடிகை கௌரி கிஷன்- ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரும் 'அடியே' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் வேறு வழியின்றி இந்த சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடும் என அவதானிக்க முடிகிறது.

இசை, பாடல்கள், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம்.. என படைப்பிற்கு வலிமை சேர்க்கும் தொழில்நுட்ப குழுவினர் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கன்டினிட்டி மிஸ்ஸிங் போன்ற படைப்பாக்க குறைபாடுகள் மற்றும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், 'ஹாட் ஸ்பாட்'டை ரசிக்க முடிகிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவதற்காக இயக்குநர் கையாளும் உத்தி பாராட்டை பெறுகிறது.

ஹாட் ஸ்பாட் - இளைஞர்களுக்கான டூரிஸ்ட் ஸ்பாட்.

தயாரிப்பு : கே ஜே பி டாக்கீஸ் & செவன் வாரியர் ஃபிலிம்ஸ்

நடிகர்கள் : கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி, சுபாஷ், சோபியா மற்றும் பலர்

இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்

மதிப்பீடு : 3/5

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23