சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'தலைவர் 171' படத்தின் அப்டேட்டை படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
இயக்குநரும், 'இனிமேல்' மூலம் நடிகருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'தலைவர் 171' படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தினைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் லுக்கிற்கான காணொளி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் திகதியன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்கு பதிவு நிறைவு பெற்றதும்..சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் அப்டேட் வெளியாவதாலும், லோகேஷ் கனகராஜ் -சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முறையாக கூட்டணி அமைத்திருப்பதாலும் 'தலைவர் 171' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM