கோஹ்லியின் அதிரடி அரைச் சதம் வீண்போனது; RCBயை 7 விக்கெட்களால் வென்றது KKR

Published By: Vishnu

30 Mar, 2024 | 01:16 AM
image

(நெவில் அன்தனி)

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 10ஆவது போட்டியில் 7 விக்கெட்களால் மிக இலகுவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வெற்றியீட்டியது.

183 என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சுனில் நரேன், ஃபில் சோல்ட், வெங்கடேஷ் ஐயர், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அதிரடித் துடுப்பாட்டங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றியை இலகுவாக்கின.

அத்துடன் இப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் சார்பாக விராத் கோஹ்லி குவித்த அதிரடி அரைச் சதம் வீண்போனது.

சுனில் நரேன் மற்றும் பில் சோல்ட் ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி பவர் ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 85 ஓட்டங்களைக் குவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ஸ்திரமான ஆரம்பத்தை  இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சுனில் நரேன் ஆட்டம் இழந்தார். 

22 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சுனில் நரேன் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 47 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 92 ஓட்டங்களாக இருந்தபோது மற்றைய அதிரடி வீரர் ஃபில்  சோல்ட்  20 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து தங்களது அணி வெற்றியை அண்மிக்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.

எனினும் ஷ்ரேயாஸ் ஐயரும் ரின்கு சிங்கும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 39 ஓட்டங்களுடனும் ரின்கு சிங் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

விராத் கோஹ்லி மீண்டும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதம் குவித்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தார்.

இன்றைய போட்டியில்  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்  அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான பவ் டு ப்ளெசிஸ் 2ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் விராத் கோஹ்லியும் கெமரன் க்றீனும் 2ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர் செய்தனர்.

கெமரன் க்றீன் 33 ஓட்டங்களு டன்   ஆட்டம் இழந்த பின்னர் க்ளென் மெக்ஸ்வெலுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களை கோஹ்லி பகிர்ந்தார்.

மெக்ஸ்வெல் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. (151 - 5 விக்.)

அடுத்து களம் நுழைந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸ்களுடன் 20 ஓட்டங்களை விளாசி கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 59 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அண்ட்ரே ரசல் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01