19 வயதின் கீழ் மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட்டில் ஆஸி.யை 35 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

Published By: Vishnu

29 Mar, 2024 | 09:51 PM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவை 35 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா எதிர்கொண்ட இரண்டாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து யுவதிகள் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

டாவினா பெரின் (10), ஏரின் தொமஸ் (6), சரிஸ் பவ்லி (1), அலெக்ஸி ஸ்டோன்ஹவுஸ் (0) ஆகிய நான்கு வீராங்கனைகள் பவர் ப்ளே நிறைவுக்கு முன்னர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழக்க மொத்த எண்ணிக்கை 5.3 ஓவர்களில் 30 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஜொடி க்றூகொக், அணித் தலைவி ஜொசி க்ரோவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 90 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 120 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஜொடி க்றூகொக் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களைப் பெற்றார்.

கடைசியாக ஆட்டம் இழந்த ஜொசி க்ரோவ்ஸ் 41 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைக் குவித்தார்.

மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு 16 வைட்கள் உட்ட 29 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தது.

பந்துவீச்சில் ஹஸ்ரெட் கில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சியென்னா ஈவ் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லூசி ஹெமில்டல் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்தைவிட அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

அவுஸ்திரேலியா 13 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசித்த எலினோ லரோசா 6 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஹஸ்ரெட் கில் 30 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் சொஃபி ஸ்மேல் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து குழாத்தில் இடம்பெறம் தமிழ் யவுதி அமுருதா சுரேன்குமாருக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி யில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற ஏக்கத்துடன் இலங்கை இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரது முதலாவது யுவதிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இலங்கைக்கு எதிரானதாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய கலப்பு இன 4 x...

2024-05-20 20:10:35
news-image

உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-20 19:04:00
news-image

லங்கா புட்போல் கப் இறுதிப் போட்டி...

2024-05-20 12:54:40
news-image

யோர்க்ஷயர் அணியில் இலங்கை வீரர் விஷ்வா...

2024-05-20 12:38:26
news-image

கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி மழையால்...

2024-05-20 02:14:27
news-image

கடைசிப் போட்டியில் பஞ்சாபை 4 விக்கெட்களால்...

2024-05-19 20:30:36
news-image

ஜப்பானில் காலிங்க குமாரகே இரண்டாம் இடம்

2024-05-19 15:38:50
news-image

சென்னையை வெளியேற்றி ப்ளே  ஓவ் சுற்றில்...

2024-05-19 05:16:07
news-image

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2024-05-18 15:36:37
news-image

ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் நிர்வாகிகளுக்கான...

2024-05-18 15:29:57
news-image

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027...

2024-05-18 13:45:50
news-image

சாதனை படைத்த இந்திய அணித் தலைவர்...

2024-05-18 13:42:40