500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் சார்ஜன்ட் 500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நான்கு குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 20,000 ரூபாய் அபராதமும், இலஞ்சமாக பெற்ற 500 ரூபாவை திருப்பிக்கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM