தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ் விபத்து : 45 பேர் பலி !

Published By: Digital Desk 3

29 Mar, 2024 | 12:25 PM
image

தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ன பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு தவக்கால யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் மாமட்லகலா மலைப்பாதையில் சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லிம்போபோவின் போக்குவரத்து மற்றும் சமூக பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.

சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதோடு, ஏனைய உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே சிதறிக்கிடந்துள்ளன.

இந்நிலையில், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா  போட்ஸ்வானாவில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குச்சாவடியை ஆய்வு செய்த ராகுல் காந்தி

2024-05-20 17:31:33
news-image

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட்...

2024-05-20 12:18:50
news-image

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும்...

2024-05-20 11:56:30
news-image

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-05-20 12:15:28
news-image

எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை

2024-05-20 09:15:16
news-image

மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

2024-05-20 08:32:25
news-image

ஹெலிக்கொப்டர் காணப்படும் பகுதியை சென்றடைந்துள்ளோம் -...

2024-05-20 08:15:42
news-image

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை...

2024-05-20 08:06:51
news-image

தப்பிரிஸ் நகரத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில்...

2024-05-20 07:40:01
news-image

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி...

2024-05-20 06:42:34
news-image

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் விபத்து சதி...

2024-05-20 06:21:49
news-image

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன-...

2024-05-20 06:09:00