ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச் செய்தது

Published By: Vishnu

29 Mar, 2024 | 12:52 AM
image

(நெவில் அன்தனி)

ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் 9ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை 12 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ்  அணி  வெற்றிகொண்டது.

ரியான் பரக் அதிரடியாகக் குவித்த அரைச் சதமே ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

எவ்வாறாயினும் ராஜஸ்தான் றோயல்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் (5), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (15), ஜொஸ் பட்லர் (11) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 8ஆவது ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் ரியான் பரக் மூன்று சிறப்பான இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை பலமான நிலையில் இட்டார்.

ரவிச்சந்திரன் அஷ்வினுடன் 4ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 54 ஓட்டங்களையும் த்ருவ் ஜுரெலுடன் 5ஆவது விக்கெட்டில்  23 பந்துகளில் 52 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மியருடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 16 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ரியான் பரக் பகிர்ந்தார்.

நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ரியான் பரக், தான் எதிர்கொண்ட முதல் 26 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், அடுத்த 19 பந்துகளில் 58 ஓட்டங்களைக் குவித்தார். அதில் கடைசி ஓவரில் 25 ஓட்டங்கள் அடங்கியதுடன் ரியான் பராக் 45 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களையும் த்ருவ் ஜுரெல் 12 பந்துகளில் 20 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மியர் 7 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய ஜோடியினரான மிச்செல் மார்ஷ் (23), டேவிட் வோர்னர் ஆகிய இருவரும் 20 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் மிச்செல் மார்ஷ், ரிக்கி பூல் (0) ஆகிய இருவரும் ஓரே எண்ணிக்கையில் ஆட்டம் இழக்க டெல்ஹி கெப்பிட்டல் தடுமாற்றம் அடைந்தது.

எனினும் டேவிட் வோர்னரும் அணித் தலைவர் ரிஷாப் பான்ட்டும் 3ஆவது விக்கெட்டில் 46 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஆனால், அவர்கள் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

டேவிட் வோர்னர் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களையும் ரிஷாப் பான்ட் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து அபிஷேக் பொரெல் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (122 - 5 விக்.)

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்று ராஜஸ்தான் றோயல்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

கடைசி 2 ஓவர்களில் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சந்தீப் ஷர்மா வீசிய 19 ஆவது ஓவரில் 15 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் தேவைப்பட ஆவேஷ் கான் கடைசி ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் 4 ஓட்டங்களே பெறப்பட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தோல்வியைத் தழுவியது.

ட்ரைட்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 44 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நண்ட்ரே பேர்கர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக்...

2024-10-06 23:29:24
news-image

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6...

2024-10-06 20:50:19
news-image

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

2024-10-05 23:31:16
news-image

ஆஸி.யிடமும் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன்...

2024-10-05 20:40:58
news-image

அவுஸ்திரேலியாவுடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப்...

2024-10-05 21:45:40
news-image

இலங்கை - அவுஸ்திரேலியா மகளிர் ரி20...

2024-10-05 15:13:56
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் 18வயதின் கீழ்...

2024-10-04 19:15:40
news-image

பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின்...

2024-10-04 19:02:14
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2024-10-04 01:43:15
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10...

2024-10-03 23:07:14
news-image

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி....

2024-10-03 10:51:18
news-image

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில்...

2024-10-01 13:04:04