இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நுவரெலியா, அட்டன் பிரதேசங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தோட்டங்கள் தொடர்பான மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இன்று (28) நுவரெலியா மாவட்ட செயலகத்தின் மிராக்கிள் மண்டபத்தில் நடைபெற்றது.
புஞ்சிஹேவா மற்றும் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எல்.டி.டி.தெஹிதெனிய ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் குமுதுனி விதானாவின் வழிகாட்டலின் கீழ் ஹட்டன் பிராந்திய அலுவலகத்துடன் இணைந்து நீதிக்கான ஆதரவு திட்டத்தினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கும், சிவில் சமூகத்தினருக்கான நிகழ்ச்சி பிற்பகல் 02.00 மணிக்கும் நடத்தப்பட்டன.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதிகள், சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் உட்பட 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடம்பெற்றது.
மாலை 2 மணிக்கு ஆரம்பமான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான நிகழ்ச்சியில் ஏராளமான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM