கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு கடன்வழங்குனர்கள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியிருப்பதாகவும், ஆகவே இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எட்டமுடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவிலுள்ள ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் போவோ மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருக்கும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச பிணைமுறியாளர்கள் குழுவுடன் லண்டனில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவொன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி 'சர்வதேச நாணய நிதியத்தினால் அடுத்தகட்ட கடன்நிதி விடுவிக்கப்படுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இலங்கைக்கு மிகமுக்கியமானதாகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இவ்வாரம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின்போது, இலங்கைக்கும் சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து மீளவலியுறுத்தப்பட்டதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மதிப்பீட்டு குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினால் கடந்த வாரம் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்கு தமது இயக்குனர் சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேலும் 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை ஓரளவு மீட்சியடைவதற்கு உதவிய மறுசீரமைப்பு செயன்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த உத்தேசித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM