அவுஸ்திரேலியாவில்இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ள நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் .
அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர் இன நாய்க்கும் மக்பைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு சமூக ஊடகள் மூலம் தெரியவந்தது தொடர்ந்து இஸ்டகிராமில் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் மொலியையும் பெகியையும் பின்தொடர்கின்றனர்.
மொலியை வனவிலங்கு காப்பகத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதனை குறிப்பிட்ட குடு;ம்பத்தினரிடம் கையளிக்க வேண்டும் என குயின்ஸ்லாந்து பிரதமர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறிய குழுவொன்று தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்ததால் மொலியை வனவிலங்கு காப்பகத்திடம் கையளித்துள்ளதாக அதனை வளர்த்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
தான் எங்கு யாருடன் வசிக்கவேண்டும் என மக்பியே ஏன் தீர்மானிக்க முடியாது என நாங்கள் கேள்விஎழுப்புகின்றோம் என தம்பதியினர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு;ள்ளனர்.
வீடியோக்களில் நான்கு வருடங்களாக ஒன்றாக தோன்றிய பெகியையும் மொலியையும் மீண்டும் சேர்த்துவைக்குமாறு கோரும் மனுவொன்றில் 50000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சமூகத்தின் ஆர்வத்தை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் மக்பைக்கள் வீடுகளில் வளர்க்கப்படுபவவை அல்ல தற்காலிகமாக மாத்திரம் வீட்டில் வளர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM