கட்டித்தார் அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் பல்வேறு வகையான பெயின்ட்கள் மற்றும் மேற்பூச்சு வகைகளையும் பல புகழ்பெற்ற வர்த்தக நாமங்களின் உரிமையாண்மையையும் கொண்ட இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி, அதன் பிரதான வர்த்தக நாமங்களில் ஒன்றான Britex தயாரிப்புகளை மீளறிமுகம் செய்துள்ளது.
உயர் தர வர்ண துருப்பிடிக்காத மற்றும் பொதுத்தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு மேற்பூச்சு வகைகள் இந்த வர்த்தக நாமத்தின் கீழ் 50 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் பயன்படுத்தப்படுகிறது.
இன்று primer, undercoat மற்றும் topcoat போன்ற மூன்று விதமான அனுகூலங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரே மேற்பூச்சு வகையாக Britex அமைந்துள்ளது. இதன் மூலமாக மேற்பூச்சு வகைகளில் ஏற்படும் செலவீனத்தில் மூன்றிலிரண்டு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு மீதப்படுத்திக் கொள்ள முடியும். Britex ஐ Britex Turpentine கொண்டு மென்மையாக்கி, மேலதிகமாக 33 சதவீதமான பகுதிகளுக்கு பூசிக்கொள்ள முடியும்.
Britex வர்த்தக நாமம் சந்தையில் பரந்தளவு பாதுகாப்பு மேற்பூச்சு வகைகளை 50 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கையை வென்றுள்ளதுடன் சர்வதேச தரங்களுக்கமைய, சகாயமான விலையில் உயர் தரமான தயாரிப்புகளை கொண்டுள்ளது.
இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பு என்பதுரூபவ் எமது வியாபார கொள்கையில் மத்திய நிலையை வகிக்கிறது.
சந்தையில் நாம் சமர்ப்பிக்கும் எமது தயாரிப்புகள் எமது வியாபாரக் கொள்கைகளை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாட்டில் எம்மை மிகச்சிறந்த இரும்பு பெயின்ட் நிபுணராக இச்செயற்பாடுகள் நிலைநிறுத்தியுள்ளது” என்றனர்.
மேலும், Britex இல் பெருமளவு ஒன்றிணைந்த தயாரிப்புகள் காணப்படுவதுடன் சாதாரண மற்றும் விசேட வர்ண துருப்பிடிக்காத மற்றும் பொதுப்பாவனை இரும்பு மேற்பூச்சுகள் மற்றும் குறைந்த விலையிலமைந்த மற்றும் உயர் தரம் வாய்ந்த Turpentines மற்றும் Thinners போன்றன உள்ளடங்கியுள்ளன.
உள்ளக மற்றும் தொழிற்துறை பாவனைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கையை Britex கொண்டுள்ளது. அரிப்பை தடுக்கும் மேற்பூச்சு முதல் பெயின்ட் மென்மையாக்கி வரை சகல விதமான தயாரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள Britex, அதன் தரத்தை உறுதி செய்துள்ளதுடன் பல தலைமுறைகளாக இரும்பு வேலைப்பாடுகளில் ஈபடுவோர் மத்தியில் தரத்துக்கான நம்பிக்கையை பெற்றுள்ளது.
கட்டித்தார் அடிப்படையிலான தயாரிப்புகள் உற்பத்தியில் இலங்கையில் இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி முன்னோடியாக திகழ்வதுடன் 1964ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அணியினரால் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
தற்போது இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி நிறுவனத்தினால் கட்டித்தார் தரங்களான 80/100, 60/70 மற்றும் ஒட்சியேற்றம் செய்யப்பட்ட கட்டித்தார் தரங்களான 85/25, 95/15 மற்றும் 115/15 போன்றன அடங்கியுள்ளன.
மேலும் நிறுவனத்தினால் இமல்ஷன் தர தெரிவுகளான CRS 1 CRS 2 CSS1 CSS 2 மற்றும் MC 30 MC 70 தெரிவுகளை Sealkote வர்த்தக நாமப் பெயரில் கொண்டுள்ளது.
மேலும் NOLEAK தெரிவுகள் மற்றும் மழையிலிருந்தும் நீர்க்கசிவிலிருந்தும் பாதுகாப்பு வழங்கக்கூடிய தயாரிப்புகளையும் கொண்டுள்ளது. பரந்தளவு தொழிற்துறை, உள்ளக மற்றும் வணிக தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த வர்த்தகநாமத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வர்த்தக நாமத் தெரிவுகளில், Sealkote, Britex, NOLEAK, Exchemie, Autosyl, Bitkote, Felt Fix, Barkseal போன்றன அடங்கியுள்ளன.
இந்த பதிவு செய்யப்பட்ட வர்த்தக நாமக்குறியீடுகளில், அதிகளவு கேள்வியை கொண்டுள்ள தரம் வாய்ந்த உற்பத்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி என்பது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்தை 011 5 289 845 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது info@iac.lk எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம். நிறுவனத்தின் இணையத்தளம் www.iac.lk ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM