Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட YAMALUBE Lubricants தற்போது AMWவிடமிருந்து கிடைக்கிறது

28 Mar, 2024 | 10:39 AM
image

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது, ஜப்பானின் Yamaha Motor Co. Ltd. (YMC)இன் அங்கீகரிக்கப்பட்ட முகவரும், இலங்கையில் Yamalube Lubricants இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. Yamalube Lubricants குறிப்பாக Yamaha தயாரிப்புகளுக்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் ஆகும்.

செயற்றிறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த Yamaha மோட்டார் ‍சைக்கிள்கள் மற்றும் தயாரிப்புகளின் தனித்துவமான தேவைகளை ஆழமாகப் அறிந்து, மிகவும் திறமையான Yamaha பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த எண்ணெய் தக்கவைப்பை Yamalube கொண்டுள்ளது. அதாவது தேய்மானம் மற்றும் பாதிப்பைத் தடுக்க மிகவும் கடினமான சூழல்களிலும் இது மிகவும் பாதுகாப்பான மசகு அடுக்கைப் பராமரிக்கிறது. இத்தயாரிப்புகள் யாவும் American Petroleum Institute (API) மற்றும் National Marine Manufacturers Association (NMMA) ஆகியவற்றின் தொழில்துறை தரங்களையும் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் மிக உயர்ந்த தரத்தையும், தரம் வாய்ந்ததாகவும் இருப்பதை Yamalube Lubricants உறுதி செய்வதோடு, தொழிற்துறை அளவுகோல்களை அது கடைபிடிக்கிறது.

செயற்றிறன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிப்பவர்களுக்கு ஒரு தெளிவான நன்மையை Yamalube வழங்குகிறது. அதன் தனித்துவமான உருவாக்கம் மற்றும் சர்வதேச தர கடைபிடிப்பானது, எந்தவொரு Yamaha மோட்டார்சைக்கிளின் எஞ்சினினதும் 'திரவ பாகமாக' அதனை அமைக்கிறது. AMWஆனது, இலங்கையில் Yamaha மற்றும் Yamalube Lubricants ஆகிய இரண்டுக்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில், கிரீஸ்கள், கியர் ஒயில்கள், செயின் லூப்ரிகண்ட் உள்ளிட்ட மசகு எண்ணெய்களின் விரிவான வரிசை மூலம் தமது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தற்போது அனைத்து AMWவின் அங்கீகரிக்கப்பட்ட Yamaha முகவர்களிடமும் Yamalube Lubricants கிடைக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58