பாதாள உலக முக்கிய நபரான அல்டோ தர்மாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தம் தொடர்பாக பரிந்துரைக்கும் கடிதமானது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கையொப்பத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் விசேட பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பாதாள உலகுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்டோ தர்மாவிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஒன்று தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM