(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் தலா இரண்டு சதங்களை விளாசிய இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் சக வீரர் கமிந்து மெண்டிஸும் ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா 15 இடங்கள் முன்னேறி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த 14ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
அதேவேளை, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் பிரவெசித்துள்ள கமிந்து மெண்டிஸ் இணை 64ஆவது இடத்தில் உள்ளார்.
இதே டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த திமுத் கருணாரட்ன துடுப்பபாட்ட தரவரிசையில் தொடர்ந்தும் 7ஆம் இடத்தில் இருக்கிறார்.
தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் பங்ளகாதேஷுக்கு எதிரான சில்ஹெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடியாகினர்.
அவுஸ்திரேலியாவின் இயன் செப்பல் - க்ரெக் செப்பல் ஜோடியினர் வெலிங்டனில் 1974இல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் - அஸார் அலி ஜோடியினர் அபு தாபியில் 2014இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்களிலும் சதங்கள் குவித்த முன்னைய ஜோடிகளாவர்.
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ராஜித்த, விஷ்வா முன்னேற்றம்
சில்ஹெட் டெஸ்ட போட்டியில் பந்துவீச்சில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர்களான கசுன் ராஜித்த மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோரும் டெஸ்ட் பந்துவீச்ச தரவரிசையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றியுள்ளனர்.
பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியில் 112 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் கசுன் ராஜித்த 6 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
விஷ்வா பெர்னாண்டோ 7 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்தில் உள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 20 விக்கெட்களையும் வீழ்த்தியபோதிலும் சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்தும் 8ஆவது இடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை இலங்கை 6ஆம் இடத்துக்கு தாவியது
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் கடைசி இடத்திலிருந்த இலங்கை 3 இடங்கள் முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுடனான தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தொல்வி அடைந்த இலங்கை, சில்ஹெட்டில் பங்களாதேஷை 328 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் தடவையாக 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிய இலங்கை, 33.33 என்ற விகிதாசார புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி பங்களாதேஷுடன் 6ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM