கல்வித்துறைக்கு குறைவாக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 140 ஆவது இடத்தில் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணி

Published By: Vishnu

27 Mar, 2024 | 10:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் கல்வி முறைமை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் 141 நாடுகளின் பட்டியலில் இலங்கை 140 ஆவது இடத்தில் உள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு துறைக்கு 580 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை முறையற்றது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸர் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியில் உள்ள  ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் கல்வி முறைமை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் 141 நாடுகளின் பட்டியலில் இலங்கை 140 ஆவது இடத்தில் உள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 200 பில்லியின் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு 580 பில்லியன் ரூபாவும்,அரச நிர்வாக துறைக்கு 900 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலம் இளம் தலைமுறையினர் வசம் என்று குறிப்பிடப்படுகின்ற நிலையில் கல்வித்துறைக்குக் குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்படுகிறது.இலங்கையின் கல்வி முறைமையை மாற்றியமைப்பதற்கான தேவைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.கல்வி முறைமை மாற்றியமைப்பதற்கான அதன் உறுதியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் முக்கிய பங்கை அங்கீகரித்து ஐக்கிய நூற்றாண்டு முன்னணி இலங்கையின் கல்விக் கொள்கைக்கான முக்கிய பல  பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

ஆரம்ப குழந்தைப் பருவக் கல்வியில் அபிவிருத்தி – வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதற்காக  ஆரம்hகால குழந்தைப் பருவக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது.

பாடத்திட்ட சீர்த்திருத்தம் -நடைமுறை திறன்கள்,விமர்சன சிந்தனை மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து,நவீன பணியாளர்களின் சவால்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்ட சீர்த்திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆதரவு – ஆசிரியர்களுக்குத்  தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு  வாய்ப்புக்களை வழங்க உறுதிபூண்டுள்ளது.ஆசிரியர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதற்கான திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

கல்விக்கான அணுகல் - அனைத்து குழந்தைகளுக்கும்  அவர்களின்  சமூகப் பொருளாதாரப் பின்னணி,பாலினம், இனம் அல்லது வாழிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தரமான கல்விக்கு சமமான அணுகலை வழங்க வேண்டும்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு – கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும்  மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மாணவர்களை தயார்படுத்தலுக்கு வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது அத்தியாவசியமானது.

பன்மொழி மேம்பாடு – பன்மொழியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும்.மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாசார புரிதலை வளர்ப்பதற்கு பல மொழிகளில்  அறிவுறுத்தல்களை  வழங்குவது அவசியமானது.

கல்வித்துறையின் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள், பெற்றோர் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் உள்ளிட்ட சகலரும் எம்மிடம் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள்...

2024-11-05 09:18:23
news-image

எஹெலியகொடவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...

2024-11-05 09:15:57
news-image

இன்றைய வானிலை 

2024-11-05 06:20:03
news-image

எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்கள் வைத்திருந்த சந்தேக நபர்...

2024-11-05 03:00:16
news-image

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி...

2024-11-04 23:39:48
news-image

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை....

2024-11-04 23:36:36
news-image

மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும்...

2024-11-04 20:17:28
news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17