காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது. எனினும் இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களிலிருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்த உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் கோரியுள்ளது.
இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் கோரியுள்ளது.
எனினும், வான் வழியான விநியோகம் என்பது காஸாவிலுளள பலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடரும் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM