“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி TV யில் நா‍ளை முதல் ஒளிபரப்பாகிறது

29 Mar, 2024 | 09:28 AM
image

மக்கள் சக்தி “சக்தி TVயின்” மற்றுமொரு மாபெரும் படைப்பாக இலங்கை வாழ் இளம் கலைஞர்களை உலகறியச் செய்யும் முயற்சியாக, தமிழ் இசைத்துறையின் மறுமலர்ச்சியாக முற்றிலும் மாறுபட்ட இசை reality நிகழ்ச்சியாக சனிக்கிழமை 30 ஆம் திகதி முதல் அறிமுகமாகிறது“Shakthi Crown”. 

இலங்கையின் முதற்தர தமிழ்  தொலைக்காட்சியாக விளங்கும் சக்தி TV கடந்த காலத்தில் மக்களை மகிழ்விக்கவும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. 

எப்போதும் சக்தி TV தயாரிக்கும் நிகழ்ச்சிகள் நம் நாட்டு இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளையும் அவர்களின் போராட்டத்தையும் வெளிக்காட்டி, அவர்களை புதிய வழியில் இட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளன. 

கடந்த 25 வருடங்களில் சக்தி TV உருவாக்கிய நிகழ்வுகளும், சக்தி வாய்ப்பளித்த கலைஞர்களும், இன்றும் என்றும் மக்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். 

Shakthi Crown எனப்படும் இந்த புதிய முயற்சி நம் நாட்டில் பாடும் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக வித்தியாசமாகவும் சர்வதேச தரத்திலும் உருவாக்கப்படும் ஒரு reality நிகழ்ச்சியாகும். 

43 அத்தியாயங்கள் கொண்ட இந்த நிகழ்ச்சி நாளை முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8.30 மணிக்கு இல்லத்திரை சக்தியை அலங்கரிக்கவுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் நோக்கமும் அதன் உள்ளடக்கமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த நிகழ்ச்சியின் உருவாக்கமும் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த அழகிய நிகழ்வை Capital Maharaja குழமத்தின் ஓர் அங்கமாகவும் Stein கலையகம் உருவாக்கவுள்ளது.

சக்தி TVயின் 25 வருட அனுபவமும் Stein கலையகத்தின் உலக தரமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மிகச்சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Shakthi Crown தமிழ் இசைத்துறையின் மறுமலர்ச்சி இந்த புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ள 30 ஆம் திகதி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு சக்தி TVயுடன் இணைந்துகொள்ளுங்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46