மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாலில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் தாளங்குடாவில் இம்மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. தாளங்குடா பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள புல் விளைந்த காட்டின் நடுப்பகுதியிலேயே இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் புல் வெட்டிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியொருவர் கொடுத்த தகவலின்பேரிலேயே பாதுகாப்பு தரப்பினர் குறித்த மிதிவெடியை மீட்டுள்ளனர்.

காத்ததன்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.