இலங்கை சுற்றுலாத்துறையில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன! - பொலிஸ் மா அதிபர்

27 Mar, 2024 | 11:54 AM
image

நாட்டில் இடம்பெறும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் சுற்றுலாத்துறையில் நேரடி தாக்கம் செலுத்துவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

தென்மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பில் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஹுங்கல்ல, கொஸ்கொடை, ரத்கம மற்றும் ஹிக்கடுவை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அமைதியான சூழ்நிலையையே விரும்புகின்றனர். இந்நிலையில், அவர்கள் எமது நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி பிரயோகங்களைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியடைகின்றனர். இதனால் அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதை நிரந்தரமாக தவிர்க்க கூடும். 

எனவே, சட்டங்களை கடைப்பிடித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36