கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் தமது நண்பர்களுடன் மஹாவலி கங்கையில் நீராடச்  சென்று காணாமற்போயிருந்த  16 வயது மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த  17 ம் திகதி நீராடச் சென்ற ஐந்து மாணவர்களுள் ஒரு மாணவரன் நீரிழ் மூழ்கி காணாமற் போயிருந்த நிலையில், குறித்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்நிலைியில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த மாணவர்கள் தடைசெய்யப்பட்ட இடத்தில் நீராடச் சென்றதன் விளைவாகவே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவன்  கண்டி தர்மராஜ கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் திலந்த முதலிகே என தெரியவந்துள்ளது.

இவரது மரணம்தொடர்பான மேலதிக  விசாணைகளை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.