'சைரன்' படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு மீண்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜீனி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்தவுடன் உற்சாகமடைந்த படக் குழு, செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜீனி' திரைப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி. கே கணேஷ் தயாரித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் நடிகை வாமிகா கபி தேவதையாகவும், ஜீனி எனும் மாயஜாலம் நிகழ்த்தும் மன்னவனாக ஜெயம் ரவியும், சாதாரண மனிதர்களாக தேவயானி மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருப்பதாக அவதானிக்க முடிவதால்.. படத்தைப் பற்றிய சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் இப்படத்தின் டீசர் அல்லது சிங்கிள் ட்ராக் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM