எம்மில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பேச்சில் குளறல், தடுமாற்றம் போன்றவை ஏற்படும்.
இவை அரிது என்றாலும் ஏற்படும் போது விவரிக்க இயலாத தர்ம சங்கடத்தை எதிர்கொள்வர். இதனை மருத்துவ மொழியில் ஹண்டிங்டன்'ஸ் டிசிஸ் என குறிப்பிடுவர்.
இதற்கு தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் நவீன மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஹண்டின்டன்'ஸ் நோய் என்பது மரபணு குறைபாடுகளால் நரம்பியல் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பாகும். இதன் போது மூளை மற்றும் பல்வேறு நரம்பியல் மண்டலங்களிலுள்ள நரம்பு உயிரணுக்கள் சிதைவடைகிறது.
இதனால் மூளை பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள உடல் இயக்கம், மனநலம், தன்னிச்சையான செயல்பாடு ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பொதுவாக முப்பது வயதுக்கு மேல் ஐம்பது வயதிற்குள்ளாக இதன் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு இத்தகைய பாதிப்பு இருபது வயதிற்குள்ளும் ஏற்படக்கூடும். அவர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை முறைகள் உண்டு என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கை, கால் போன்றவற்றில் தன்னிச்சையான நடுக்கம், தசை பலவீனம், நடப்பதில் தடுமாற்றம், சம நிலையாக வைத்திருப்பதில் சமசீரற்ற தன்மை, உணவை விழுங்குவதில் சிரமம், தொடர்ந்து பேசுவதில் தடுமாற்றம், எண்ணங்களை குவித்து ஒழுங்குப்படுத்தி அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதில் குறைபாடு, விழிப்புணர்வின்மை, புதிய தகவல்களை உட்கிரகித்துக் கொள்வதில் தாமதம், எரிச்சல், தூக்கமின்மை, தனிமைப்படுத்திக் கொள்வது, தற்கொலை பற்றிய எண்ணங்கள்.. போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
இவர்களுக்கு நரம்பியல் செயல்பாடு குறித்த பிரத்யேக பரிசோதனைகள், குறிப்பாக நினைவுத்திறன், காரணம் கற்பித்தல், மொழித் திறன் போன்ற பரிசோதனைகளையும், உள நலம் குறித்த பரிசோதனைகளையும் மேற்கொள்வர். சிலருக்கு அவர்களுடைய மூளை அமைப்பு மற்றும் மூளையின் செயல் திறன் குறித்த பிரத்யேக பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். வேறு சிலருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பர்.
பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் நோயாளிகளுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. முதலில் உங்களுக்கு நோய்க்கான அறிகுறியை கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனுடன் ஸ்பீச் தெரபி, ஒக்குபேஷனல் தெரபி, பிசிகல் தெரபி, சைக்கோ தெரபி பல்வேறு இயன்முறை சிகிச்சைகளும் இணைத்து வழங்கப்பட்டு நிவாரணம் தருவர். இதனுடன் வாழ்க்கை நடைமுறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றத்தை குறித்தும் மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அவரின் அறிவுரைகளை உறுதியாக பின்பற்றினால் இதிலிருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியர் வேணி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM