தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான புதிர்போட்டி பரிசளிப்பு விழா

26 Mar, 2024 | 12:23 PM
image

(எம்.நியூட்டன்)

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின்  2023 இல் வடமாகாண ரீதியில்  நடாத்தப்பட்ட மகாஜனன் புதிர்ப்போட்டிக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரியின் பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு முன்னாள் ஆங்கில பாட ஆசிரியை சௌபாக்கியபதி ராஜரட்ணம் மற்றும் பத்மபாஷினி செல்வஸ்கந்தன்  ஆகியோர் ஞாபகார்த்தமாக சட்டத்தரணி இ.செல்வஸ்கந்தனின்  அனுசரணையுடன் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ்.போதனா வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி த.பேரானந்தராஜா கலந்து கொண்டு  பரிசில்களை வழங்கிச் சிறப்பித்தார்.

இம்முறை கணிதப்புதிர்ப் போட்டியில் 1ம் இடத்தை யாழ் இந்துக்கல்லூரி மாணவனும், விஞ்ஞானப் புதிர்ப் போட்டியில் 1ம் இடத்தை யா. ஹாட்லிக் கல்லூரி மாணவனும் பெற்று, ரூபா 40000 பணப் பரிசிலை வென்றனர். மாகாண மட்டத்தில் 1724 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கணிதத்தில் 20 மாணவர்களும் விஞ்ஞானத்தில் 20 மாணவர்களும் பரிசில்களை வென்றனர். இவை தவிர 2022 உயர்தரத்தில் 3ஏ சித்தி பெற்ற மகாஜனாக் கல்லூரியின் மாணவர்களுக்கும் மற்றும் சாதாரண தரத்தில் 9ஏ, 8ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில்...

2024-04-23 03:20:48
news-image

ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

2024-04-22 21:00:24
news-image

கேரளா நைற் 

2024-04-22 22:46:43
news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12