சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான “ வசந்த குமார” வின் உதவியாளரான “ ஐயா ” என்று அழைக்கப்படும் நபரொருவர் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்றுக் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய இவர் இதற்கு முன்னர் 187 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 60 வருடகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை காரணமாக 10 வருடகால சிறைத்தண்டனையை பெற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 7 மாதங்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் சொகுசு வீடொன்றை பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 6,430 மில்லிகிராம் ஹெரோயின், 8 கையடக்கத் தொலைபேசிகள், 10 சிம் அட்டைகள் , 7 வங்கி கணக்கு அட்டைகள் மற்றும் கார் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான “ வசந்தகுமார” வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM