யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
கடந்த 20.03.2024 அன்று கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் திருவிழா ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குமான கலச கும்பாபிஷேக கிரியைகள் நடைபெற்று, காலை 05.10 மணியளவில் சகல நான்கு பக்ககோபுர கலச மஹா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
பின் பரிவார மூல மூர்த்திகளுக்கான மஹா கும்பாபிஷேகம் காலை 07 மணிக்கு இடம்பெற்றதுடன் 08.40 முதல் 09.30 மணி வரையான சுபவேளையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாட்களும் மண்டலாபிஷேக உற்சவம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM