தமிழ் திரையுலகை பொருத்தவரை தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கினால் மட்டுமே ரசிகர்கள் தங்களுடைய விருப்பத்திற்குரிய நட்சத்திரங்களை தலை மேல் வைத்து கொண்டாடுவார்கள்.
இதனால் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நட்சத்திர நடிகர்களும் வித்யாசமான கதைகளையும், வேடங்களையும் தெரிவு செய்து நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கமர்ஷியல் வெற்றிக்காக 'சைரன்' எனும் வெற்றி படத்தை தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி 'ஜீனி' எனும் குழந்தைகளை கவரும் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இயக்குநர் மிஷ்கினின் பட்டறையிலிருந்து உருவாகி இருக்கும் அவருடைய உதவியாளர் அர்ஜுனன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஜீனி' திரைப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' A. R. Rahmanஇசையமைத்திருக்கிறார். ஃபேண்டசி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் வகையில் பான் இந்திய திரைப்படமாக 'ஜீனி' தயாராகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக்கில் ஜீனியாக ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுவதும், அவரைச் சுற்றி குழந்தைகள் விரும்பும் உணவு பொருட்களும், பெரியவர்கள் விரும்பும் பணம், தங்க காசு ஆகியவையும் வடிவமைப்பில் இடம்பெற்றிருப்பதால்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை பூதம் என்றால் 'பட்டணத்தில் பூதம்' என்ற திரைப்படம் திரைப்படம் தான் நினைவுக்கு வரும். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் பின்னரும் இன்றும் மக்களின் நினைவில் பசுமையாக படர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியான 'மாவீரன்' திரைப்படத்திலும் கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்று இடம்பெற்று ரசிகர்களை வியக்க வைத்தது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான வேடத்தில் நடிப்பதால் 'ஜீனி' பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM