குழந்தைகளுக்காக அரசியல் கட்சியை தொடங்கிய யோகி பாபு

Published By: Digital Desk 7

25 Mar, 2024 | 05:31 PM
image

தமிழின் ஒப்பற்ற நகைச்சுவை நட்சத்திர நடிகர்களான செந்தில் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'சகுனி' எனும் அரசியல் சார்ந்த திரைப்படத்தை இயக்கிய Director N. Shankar Dayal இயக்கத்தில் உருவாகி வரும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' எனும் திரைப்படத்தில் செந்தில், யோகி பாபு, சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, அஸ்மிதா, அகல்யா வெங்கடேசன், நன்னன், அத்வைத், சோனியா போஸ், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெ. லட்சுமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைத்திருக்கிறார். குழந்தைகளைப் பற்றிய அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் சங்கர் தயாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் தற்போது இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் குறித்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் தெறிக்கும் நிலையில்.. தேர்தல் அரசியலில் வாக்களிக்க தகுதி பெறாத குழந்தைகளைப் பற்றியும், அவர்களுக்கான அரசியலைப் பற்றியும் பேசவிருக்கும் வகையில் உருவாகும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என பல கழகங்கள் தமிழக அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த தருணத்தில்.. யோகி பாபு- செந்தில் - என். சங்கர் தயாள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' எனும் அரசியல் சார்ந்த படைப்பும்.. அனைத்து தரப்பு வாக்காள ரசிகர்களையும் வெகுவாக இருக்கும் என உறுதியாக தெரிவிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right