யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மேலும் மூவர் கைது

Published By: Digital Desk 3

25 Mar, 2024 | 01:58 PM
image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு மனைவியுடன், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வன்முறை கும்பல் ஒன்றினால் தம்பதியினர் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு, இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த கும்பல், மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது , கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதேவேளை சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர். 

தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் சந்தேகநபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:21:37
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:23:29
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32