குரு பகவானின் ஆதிக்கம் உங்கள் ராசியின் மீதா.!

By Robert

19 Mar, 2017 | 04:42 PM
image

அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனை­வரும் செய்யும் தவ­று­களைத் திருத்திக் கொள்ளும் மாத­மாக குரு பக­வானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்­குனி மாதம் விளங்­கு­கி­றது.

நவ­கி­ர­கங்­களின் தலை­வ­னான சூரியன், ஆசி­ரி­ய­ரா­கிய குருவின் வீட்டில் அதா­வது, மீனத்தில் சஞ்­ச­ரிக்கும் மாதம் இது. பல்­வேறு சிறப்­புகள் வாய்ந்த பங்­கு­னி­மா­தத்தில் 12 ராசிக்­கா­ரர்­க­ளுக்கும் பலன்கள் எப்­படி என்­பதை தெரிந்து கொள்வோம்.

பார்­வதி - பர­மேஸ்­வரன், மீனாட்சி - சுந்­த­ரேஸ்­வரர், ஆண்டாள் - ரங்­க­மன்னார், தெய்­வானை - முருகன் என தெய்வத் திரு­ம­ணங்கள் அனைத்தும் பங்­குனி மாதத்தில் வரும் உத்­திர நட்­சத்­திர நாளில் நடந்­த­தாக புரா­ணங்கள் கூறு­கின்­றன.

அன்னை காமாட்சி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்­ப­ரேஸ்­வ­ர­ரோடு ஐக்­கி­ய­மா­னதும் இந்தப் பங்­குனி மாதத்­தில்தான்.

ஞான­கு­ரு­வா­கிய ஐயப்பன் அவ­த­ரித்­தது இந்த பங்­குனி மாதத்­தில்தான்.

பங்­குனி மாதம் பண­ப­லத்­தையும் மனோ­ப­லத்­தையும் தரும் மாத­மாக அமை­யட்டும். 12 ராசிக்­கா­ரர்­களும் ராசி­ப­லன்­களை அறிந்து கொள்­ளுங்கள்.

மேஷம்

சூரியன் பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். தொழில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும். தொழில் சம்­பந்­த­மாக வெளி­நாடு செல்லும் நிலை உண்­டாகும். உங்கள் ராசி­நாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்­கிறார்.

காரி­யங்­க­ளெல்லாம் சிறப்­ப­டையும். பதவி உயர்வு எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார் தாய் மாம­னுக்­காக செல­வுகள் அதி­க­ரிக்கும் 14ஆம் திகதிக்குப் பிறகு சம­யோ­சி­த­மாக செயல்­பட்டு வெற்றி பெறு­வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஆறா­மி­டத்தில் இருக்­கிறார். குழந்­தை­களால் மனக் கஷ்டம் உண்­டாகும். கடன் வாங்­கு­வதை தவிர்க்­கவும். சுக்­கிரன் பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார்.

மனை­விக்­காக செல­வுகள் அதி­க­ரிக்கும். வீட்டு உப­யோகப் பொருட்­களை வாங்­கு­வீர்கள்.

 சனி உங்கள் ராசிக்கு ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். திருக்­கோ­யில்­க­ளுக்கு செல்லும் நிலை உண்­டாகும். பரம்­பரை சொத்­துக்­களில் பங்­கு­கி­டைக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். உல்­லாசப் பயணம் செல்­வீர்கள். உற­வினர் வீட்டு விஷே­சங்­களில் கலந்து கொள்­வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதி­னொ­றா­மி­டத்தில் இருக்­கிறார். தொழில் இலாபம் அதி­க­ரிக்கும்.

ரிஷபம்

சூரியன் பதி­னொ­றா­மி­டத்தில் இருக்­கிறார் சம்­பளம் அதி­க­ரிக்கும். வீடு வாகன யோகம் உண்­டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார் வீடு, நிலம் வகை­களில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும். அடிக்­கடி வெளியூர் செல்லும் நிலை உண்­டாகும். புதன் பதி­னொன்­றா­மி­டத்தில் இருக்­கிறார் பண வரவு அதி­க­ரிக்கும். 14ஆம் திகதிக்குப் பிறகு வியா­பா­ரத்­திற்­காக வெளி மாநிலம் செல்­வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார்.

உல்­லாசப் பயணம் செல்­வீர்கள். குழந்­தை­களால் சந்­தோஷம் அதி­க­ரிக்கும். உங்கள் ராசி­நாதன் சுக்­கிரன் பதி­னொன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். தொழில் லாபம் அதி­க­ரிக்கும். மன ஆசைகள் எல்லாம் நிறை­வேறும். சனி உங்கள் ராசிக்கு எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். மனதில் பாரம் அதி­க­ரிக்கும். வாகன விபத்­துக்கள் உண்­டா­கலாம். ராகு நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக நான்கு சக்­கர வாகனம் வாங்­கு­வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார்.

செயல்கள் எல்லாம் சிறப்­ப­டையும்.

மிதுனம்

சூரியன் பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார். அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு பதவி உயர்வு உண்­டாகும். வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதி­னொன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு லாபம் அதி­க­ரிக்கும். சகோ­த­ரர்­க­ளினால் நன்மை உண்­டாகும். உங்கள் ராசி­நாதன் புதன் உங்கள் ராசிக்கு பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார். ஷேர் மார்க்கெட் முத­லீ­டுகள் இலா­பத்தைத் தரும் 14ஆம் திகதிக்குப் பிறகு எல்லா

வித­மான விருப்­பங்­களும் நிறை­வேறும். குரு உங்கள் ராசிக்கு நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக நகைகள் வாங்­கு­வீர்கள். புதி­தாக வீடு வாங்கும் யோகம் உண்­டாகும். சுக்­கிரன் பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார் வீட்­டுக்கு சொகுசுப் பொருட்கள் வாங்­கு­வீர்கள். பரம்­பரை தொழில் சிறப்­ப­டையும். சனி உங்கள் ராசிக்கு ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். தொழில் வியா­பாரம் மேன்மை நிலை அடையும். தொழி­லா­ளர்­களின் ஒத்­து­ழைப்பு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்­டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். கடவுள் பக்தி அதி­க­ரிக்கும்.

கடகம்

சூரியன் ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். அர­சாங்க அலு­வ­லர்­க­ளுக்கு பணி­யிட மாற்றம் உண்­டாகும். சம்­ப­ளமும் அதி­க­ரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார். சகோ­த­ரர்­களால் தொழில் நிலை சிறப்­ப­டையும் தீய­ணைப்பு துறையில் பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். வெளி­நாடு தொழில் தொடர்­புகள் சிறப்­ப­டையும் 14ஆம் திக­திக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முத­லீ­டுகள் லாபத்தைத் தரும்.

குரு உங்கள் ராசிக்கு மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்­களால் நன்மை உண்­டாகும். மனதில் குழப்பம் உண்­டாகும். சுக்­கிரன் ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். பெண்­களால் அதிர்ஷ்டம் அதி­க­ரிக்கும். குல தெய்வ கோயி­லுக்கு செல்­வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறா­மி­டத்தில் இருக்­கிறார். கடன் வாங்கும் நிலை உண்­டாகும். எதி­ரி­களால் தொல்லை உண்­டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார் செல்வச் சேர்க்கை அதி­க­ரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்­கிறார். வாக­னங்­களை கையாளும் பொழுது எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கவும்.

சிம்மம்

உங்கள் ராசி­நாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். உயர் அதி­கா­ரி­களால் தொல்லை உண்­டாகும். மனதில் குழப்பம் அதி­க­ரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். பிது­ரார்­ஜித சொத்­துக்­க­ளி­லி­ருந்து பங்கு கிடைக்கும். குல தெய்­வத்தின் அருள் கிடைக்கும். புதன் எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். ஷேர் மார்க்கெட் முத­லீ­டு­களில் கவனம் தேவை. 14ஆம் திக­திக்குப் பிறகு தொழில் நிலை சிறப்­ப­டையும். குரு

இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். செல்வச் சேர்க்கை அதி­க­ரிக்கும். குடும்­பத்தில் சந்­தோஷம் அதி­க­ரிக்கும். சுக்­கிரன் எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். பெண்­களால் தொல்லை உண்­டாகும். விலை உயர்ந்த நகை­களை பத்­தி­ர­மாக பார்த்துக்கொள்­ளவும். சனி உங்கள் ராசிக்கு ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். பொழு­து­போக்கு விஷ­யங்­களில் ஆர்வம் அதி­க­ரிக்கும். பரம்­பரை தொழில் சிறப்­ப­டையும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்­கிறார். புத்­தியில் சலனம் உண்­டாகும்.

கேது உங்கள் ராசிக்கு ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். உற­வி­னர்­க­ளுடன் நல்­லு­றவு உண்­டாகும்.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். அப்­பாவின் வியா­பாரம் சிறப்­ப­டையும் அடிக்­கடி வெளியூர் செல்லும் நிலை உண்­டாகும். செவ்வாய் எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். நெருப்­பினால் காயம் உண்­டா­கலாம்.

கூர்­மை­யான பொருட்­களை கையாளும் பொழுது கவனம் தேவை. உங்கள் ராசி­நாதன் புதன் ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். கமிஷன் வியா­பாரம் சிறப்­ப­டையும். 14ஆம் திக­திக்குப் பிறகு தாய் மாமன் வர்க்­கத்­தா­ருடன் கருத்து வேறு­பாடு உண்­டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்­கிறார். சமு­தா­யத்தில் மதிப்பும் மரி­யா­தையும் அதி­க­ரிக்கும். பண வரவு அதி­க­ரிக்கும். சுக்­கிரன் ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். பெண்­களால் சந்­தோஷம் அதி­க­ரிக்கும். வாழ்க்கைத் துணை­யுடன் கருத்து ஒற்­றுமை சிறப்­ப­டையும். சனி உங்கள் ராசிக்கு நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். பழைய வீடு வாங்­கு­வீர்கள். விவ­சாய ­பொ­ருட்கள் வியா­பாரம் சிறப்­ப­டையும். ராகு பன்­னி­ரெண்டாம் இடத்தில் இருக்­கிறார். அலைச்சல் அதி­க­ரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறா­மி­டத்தில் இருக்­கிறார். கடன் வாங்கும் சூழ்­நிலை உண்­டாகும்.

துலாம்

சூரியன் ஆறா­மி­டத்தில் இருக்­கிறார் உயர் அதி­கா­ரி­க­ளினால் தொல்லை உண்­டாகும் வீண் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம். செவ்வாய் ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். வீடு மனை நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்­ப­டையும் சகோ­த­ரர்­க­ளுடன் நல்­லு­றவு உண்­டாகும். புதன் ஆறா­மி­டத்தில் இருக்­கிறார் தாய் மாம­னுடன் சச்­ச­ரவு உண்­டாகும். 14ஆம் திக­திக்குப் பிறகு கமிஷன் வியா­பாரம் சிறப்­ப­டையும். குரு உங்கள் ராசிக்கு பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். திருக்­கோ­யில்­க­ளுக்கு தானம் தர்­மங்கள் செய்­வீர்கள். அலைச்சல் அதி­க­ரிக்கும். உங்கள் ராசி­நாதன் சுக்­கிரன் ஆறா­மி­டத்தில் இருக்­கிறார். மனை­வி­யுடன் சச்­ச­ரவு உண்­டாகும் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சீர் கெடலாம். சனி உங்கள் ராசிக்கு மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். நண்­பர்­களால் நன்மை உண்­டாகும். வெளி­யூ­ருக்கு பிர­யாணம் செல்லும் நிலை உண்­டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதி­னொன்­றா­மி­டத்தில் இருக்­கிறார் பண வரவு அதி­க­ரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். உற­வினர் வீட்டு விருந்­து­களில் கலந்து கொள்­வீர்கள்.

விருச்சிகம்

சூரியன் ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். போட்­டி­களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பரம்­பரை தொழிலில் மேன்மை உண்­டாகும். உங்கள் ராசி­நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறா­மி­டத்தில் இருக்­கிறார். சகோ­த­ரர்­க­ளுடன் சச்­ச­ரவு உண்­டா­கலாம். உடல் ஆரோக்­கி­யத்தில் கவனம் தேவை. புதன் ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார் ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்­ப­டையும். 14ஆம் திக­திக்குப் பிறகு வியா­பா­ரத்தில் கடன் கொடுப்­பதை தவிர்க்­கவும். குரு உங்கள் ராசிக்கு பதி­னொன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். எல்லா முயற்­சி­களும் வெற்­றி­ய­டையும் வங்கி சேமிப்பு அதி­க­ரிக்கும். சுக்­கிரன் ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். உடன் பிறந்த சகோ­த­ரி­களால் நன்மை உண்­டாகும். குடும்­பத்­துடன் உல்­லாசப் பயணம் செல்­வீர்கள். 

சனி உங்கள் ராசிக்கு இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். குடும்­பத்தில் சந்­தோஷம் அதி­க­ரிக்கும். பண வரவு அதி­க­ரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார். முயற்­சிகள் வெற்­றி­ய­டையும்.

கேது உங்கள் ராசிக்கு நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக வாகனம் வாங்­கு­வீர்கள்.

தனுசு

சூரியன் நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக வீடு வாங்­கு­வீர்கள். வாகன யோகம் உண்­டாகும். செவ்வாய் ஐந்­தா­மி­டத்தில் இருக்­கிறார். இயந்­திர தொழிலில் சிறப்பு உண்­டாகும். பரம்­பரை சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். படிப்பில் கவனம் அதி­க­ரிக்கும். 14ஆம் திக­திக்குப் பிறகு ஊக வணிகம் இலா­பத்தை தரும். உங்கள் ராசி­நாதன் குரு உங்கள் ராசிக்கு பத்­தா­மி­டத்தில் இருக்­கிறார். சொந்­த­மாக செய்யும் தொழில் சிறப்­ப­டையும். தொழிலால் பெருமை உண்­டாகும். சுக்­கிரன் நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக வாகனம் வாங்­கு­வீர்கள். வீட்டை அழகு படுத்­து­வீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்­கிறார். உடலில் அசதி அதி­க­ரிக்கும்.

குடும்ப உறுப்­பி­னர்­களின் ஒற்­றுமை அதி­க­ரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். அப்­பாவின் ஆரோக்­கியம் சீர் கெடலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். வியா­பாரம் விருத்­தி­யாகும்.

மகரம்

சூரியன் மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். வீடு மாறும் நிலை உண்­டாகும். அடிக்­கடி பயணம் செல்லும் நிலை உண்­டாகும். செவ்வாய் நான்­கா­மி­டத்தில் இருக்­கிறார் புதி­தாக வீடு வாங்­கு­வீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்­ப­டையும்.

புதன் மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். பிர­யா­ணத்­தினால் நன்மை உண்­டாகும். 14ஆம் திக­திக்குப் பிறகு கல்வி நிலை சிறப்­ப­டையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்­ப­தா­மி­டத்தில் இருக்­கிறார். தானம் தர்­மங்கள் செய்­வீர்கள். குல தெய்­வத்தின் அருள் கிடைக்கும். சுக்­கிரன் உங்கள் ராசிக்கு மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். இட மாற்றம் உண்­டாகும். பெண்­களால் நன்மை உண்­டாகும். உங்கள் ராசி­நாதன் சனி உங்கள் ராசிக்கு பன்­னி­ரெண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். வங்கி முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும். வெளி­நாடு செல்லும் யோகம் உண்­டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். வாகன விபத்­துகள் உண்­டா­கலாம். கேது உங்கள் ராசிக்கு இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். வீண் பேச்சைத் தவிர்க்­கவும்.

கும்பம்

சூரியன் இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். பேச்சில் அதி­காரம் அதி­க­ரிக்கும். தொழில் மூலம் பண வரு­மானம் அதி­க­ரிக்கும். செவ்வாய் மூன்­றா­மி­டத்தில் இருக்­கிறார். சகோ­த­ரர்­களால் நன்மை உண்­டாகும். புதி­தாக வீடு கட்டும் யோகம் உண்­டாகும். புதன் இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். பேசியே காரியம் சாதித்துக் கொள்­வீர்கள். 14ஆம் திக­திக்குப் பிறகு தகவல் தொடர்பு சிறப்­ப­டையும். குரு உங்கள் ராசிக்கு எட்­டா­மி­டத்தில் இருக்­கிறார். அதிர்ஷ்டம் அதி­க­ரிக்கும்.

எதிர்­பா­ராமல் பண வரவு கிடைக்கும். சுக்­கிரன் இரண்­டா­மி­டத்தில் இருக்­கிறார். புதி­தாக நகைகள் வாங்­கு­வீர்கள். குடும்­பத்தில் சந்­தோஷம் அதி­க­ரிக்கும். உங்கள் ராசி­நாதன் சனி உங்கள் ராசிக்கு பதி­னொ­ரா­மி­டத்தில் இருக்­கிறார்.

எல்­லா­வற்­றிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் லாபம் அதி­க­ரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழா­மி­டத்தில் இருக்­கிறார். நண்­பர்­களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார். மனதில் தெளிவு அதிகரிக்கும்.

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார். பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார். வீண் பேச்சை தவிர்க்கவும். நிலம், வீடு, மனை, தொழில், மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார். புத்திக் கூர்மை அதிகரிக்கும். 14ஆம் திகதிக்குப் பிறகு வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார். உறவினர்களிடையே மரியாதை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார். எல்லா செயல்களும் சிறப்படையும். தொழிலுக்காக அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார். எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். அலைச்சல் அதிகரிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுகள் காண்பதும் கர்மாவா...?

2022-11-25 11:00:22
news-image

ஆயுளை நீட்டிக்கும் எமகண்டம்..!

2022-11-23 13:04:37
news-image

முதலீடு செய்யக்கூடாத ராசி, லக்னம்

2022-11-22 13:54:10
news-image

சகுனங்கள், சமிக்ஞைகள் இரண்டும் ஒன்றா..? வேறு...

2022-11-15 12:57:53
news-image

வெளிநாடுகளில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய...

2022-11-14 17:38:58
news-image

ஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது...

2020-06-17 21:19:11
news-image

கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

2018-08-30 15:41:55
news-image

"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு...

2018-05-09 10:25:54
news-image

"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை...

2018-05-05 10:32:40
news-image

பிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.?

2018-04-08 14:27:44
news-image

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா....?

2017-12-19 12:11:41
news-image

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன?...

2017-11-19 12:26:08