முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள  கனடா- ரொறன்ரோ மாநகரின்  மேயர் ஜோன் ஹோவர்ட் டோரி,   இறுதிப்போரில் மாபெரும் மனித பேரவலம்   நிகழ்ந்த  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி   செலுத்தினார்.  

இந்த வியஜத்தின் போது அவருடன்  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கனடா- ரொறன்ரோ மாநகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ மாநகர சபையின்  தமிழ் பிரதிநிதி ஈழத் தமிழரான   நீதன் சான் மற்றும் மேயர் அலுவலகத்தின் சிரேஷ்ட தொடர்பாடல் ஆலோசகர் கீர்த்தனா கமலவர்சன் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர்கள் ரவிகரன் மற்றும் சிவநேசன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். நகருடன் இரட்டை நகர ஒப்பந்தம் தொடர்பாக வருகைதந்த மேயர்  இறுதிப்போர் நடைபெற்ற மாபெரும் மனித அவலம் நிகழ்ந்த முள்ளிவாய்க்காலுக்கு தான் சென்று அஞ்சலி செலுத்தவேண்டும் என விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில் திடீர் பயணமாக குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.