(நெவில் அன்தனி)
லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஜய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 3ஆவது போட்டியில் அணித் தலைவர் சஞ்சு செம்சன் குவித்த அபார அரைச் சதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.
சஞ்ச செம்சன், ரியான் பரக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 93 ஓட்டங்கள் ராஜஸ்தான் றோயல்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தது.
சஞ்சு செம்சன் 52 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
ரியான் பரக் 29 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 43 ஒட்டங்களைப் பெற்றார்.
த்ருவ் ஜுரெல் 12 பந்துகளில் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
195 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவர் கே.எல். ராகுல் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண் 41 பந்துகளில் தலா 4 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் தீப்பக் ஹூடா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: சஞ்சு செம்சன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM