அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நாளை! 

24 Mar, 2024 | 05:21 PM
image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு நாளை  திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளது. 

மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய  பிள்ளையார் ஆலயம் என்ற பெருமையைப் பெறும் இந்த ஆலயத்தில் ஐந்தாவது கும்பாபிஷேக நிகழ்வு நாளை காலை 9.25 மணியளவில் நடைபெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு மங்கல கணபதி பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, காலை 9.25 முதல் 10.37 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் அடியார்கள் அரோஹரா கூற, விண்ணதிர வேதம் ஓத, மங்கல வாத்தியம் ஒலிக்க, நூதன சப்ததள 108 அடி புதிய இராஜகோபுர ஸ்தூபி விமான அபிஷேகம் மற்றும் கும்ப வீதிப் பிரதட்சணம், மூல ஆலயப் பிரவேசம், ஆவாஹனம், மூர்த்த தானம், மஹா கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டு, தசமங்கல தரிசனம், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், குருமார் சம்பாவன கெளரவிப்பு, விசேட பூஜைகள் நடைபெற்று, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50