இரு உள்ளாடைகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரொயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் இருந்து 200 கிராம் நிறையுடைய 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.